திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (08:08 IST)

திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்: இன்று முதல் விற்பனை!

tirupathi
திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை இன்று காலை 9 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
செப்டம்பர் 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுவதால் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது