ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசர சட்டம்: முதல்வர் நாளை ஆலோசனை
ஆன்லைன் ரம்மியை தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் ஏராளமானோர் கோரிக்கை விடுத்த நிலையில் நாளை இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், சட்டத் துறை, காவல் துறை உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்த முக்கிய முடிவுகள் நாளை எடுக்கப்படும் என்றும் நாளை இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
ஆன்லைன் ரம்மி சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் மட்டும் சுமார் 20 பேர் தற்கொலை செய்து பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது