புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 மே 2022 (19:24 IST)

வீடியோ எடுத்த வாலிபர் கடல் அலையில் சிக்கி பலி!

sea waves
கேரள  மாநிலத்தில் பாறையில் ஏறி வீடியோ எடுத்த நபர் கடல் அலையில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள  மானிலம் விழிஞ்சம் என்ற பகுதியில் புளிங்குடி ஆழிமலை சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள கடல் பகுதிக்குச் சென்றும் பாறைகளில் ஏறி நின்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று மாலை புனலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஜோதிஷ்(25). தனது நண்பர்கள் மற்றும் யாத்திரைக் குழுவுடன் ஆழிமலை கோவிலுக்குச் சென்றார்,.  அவர் தன் நண்பர்களுடன் இணைந்து கடல் அருகிலுள்ள பாறையில் ஏறி ஜோதிஷ் தனது செல்போனில்  வீடியோ எடுத்தார். அப்போது எதிர்பாரத விதமான வந்த பெரிய அலை ஜோதிஷை கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.