புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 13 மே 2020 (20:47 IST)

நிதியமைச்சர் அறிவித்த சிறப்பு பொருளாதார திட்டம் ஏமாற்றம் அளிக்கிறது – ப. சிதம்பரம்

பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளதாவது :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  அறிவித்த சிறப்பு பொருளாதார தொகுப்பு ஏமாற்றம் அளிக்கிறது  என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறு, குறு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட கடனுதவிகளைத் தவிர வேறு எந்த  சலுகைத் திட்டங்களும் அறிவிக்கவில்லை தின வருமானத்தை நம்பி வாழ்பவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையே அளித்துள்ளது இந்த சிறப்பு பொருளாதார திட்டம் என தெரிவித்துள்ளார்.