செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (21:24 IST)

பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற மகன் கைது!

உத்தரபிரதேச மாநிலத்தில் பைக் வாங்கித் தர மறுத்த தாயை கொன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் பிரேம் நகரில் வசித்து வருபவர் அப்சர் கான். இவர் தன் தாய் பரிதாவுடன் வசித்து வந்தார்.

இவர், சில  நாட்களாக தன் தாயிடம் பைக் வேண்டுமென்று கேட்டுள்ளார். இது சம்பந்தமாக அவருக்கும் அவரது தாயுக்கும் இடையே வாக்கு வாதம் எழுந்துள்ளது.

இது தொடர்ந்து வந்த  நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி பைக் வாங்கித் தராத தன் தாயை இரும்பு தடியால் தாக்கிக் கொன்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அப்சர் கானை கைது செய்து, அவர் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தையும் பறிமுதல் செய்து, அவரை  அவரைச் சிறையில் அடித்தனர்.