வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (18:41 IST)

குழந்தைத் திருமணம் தொடர்புடைய 2,700 பேர் கைது

அசாம்  மாநிலத்தில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சட்ட விரோதமான குழந்தைத் திருமணங்கள்  நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல் மந்திரி ஹிமாந்த பிஸ்வா தலைமையிலான அமைச்சரவையில், குழந்தை திருமணத்திற்கு எதிராக  நடவடிக்கை எடுக்கவும், இதுகுறிதிது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இதுவரை குழந்தைத் திருமணம் தொடர்புடைய 2,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுசம்பந்தமாக மொத்தம் 4074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,  அடுத்த நாட்களும் இது சம்பந்தமாக கைது நடவடிக்கைப்தொடரும் என கூறப்படுகிறது.

கைதானவர்களின் 52 பேர் திருமண சடங்குகள் நடத்திய சாமியார்கள் மற்றும் காஜிக்கள் என்று அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.