செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜனவரி 2024 (19:05 IST)

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி

akilesh
மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், நாடு முழுவதும்  உள்ள பிரபல கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை தயார் படுத்தி வருகின்றன.

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, தொகுதிப்பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இன்று 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில், மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.