செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 29 செப்டம்பர் 2021 (12:17 IST)

கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு ரேபிஸ் தடுப்பூசி! – பணியாளர்கள் சஸ்பெண்ட்!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி போட வந்தவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவின் தானே பகுதியில் 45 வயதான ராஜ்குமார் யாதவ் என்பவர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை மருத்துவர் ஒரு அறையில் காத்திருக்க சொன்ன நிலையில் அங்கு வந்த செவிலியர் அவரிடம் ஒரு விவரமும் சொல்லாமல் ஊசி போட்டுள்ளார். தனக்கு போடப்பட்ட ஊசி குறித்து அவர் விசாரிக்கையில் அது வெறிநாய் கடிக்கு போடும் ரேபிஸ் தடுப்பூசி என கூறவும் ராஜ்குமார் யாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.