வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (10:44 IST)

அருள்மிகு ஸ்ரீ சோனு சூட் திருக்கோவில்!?; உதவி செய்த நடிகருக்கு கோவில் கட்டிய மக்கள்!

பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் மக்களுக்கு செய்து வரும் உதவிகளை போற்றி அவருக்காக தெலுங்கானா மக்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி போன்ற படங்களின் மூலமாக பிரபலம் ஆனவர். ஆனால் தற்போது தனது பொது சேவையால் சினிமாவை தாண்டி இந்தியா முழுவதும் ஒரு ஹீரோவாக வலம் வருகிறார். கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளிகளுக்கு உதவியது, ஏழை விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, அனாதை குழந்தைகளை தத்தெடுத்தது என தொடர்ந்து இவரது சேவைகள் வைரலாக மேலும் பலர் உதவி வேண்டி அவரை நாட, தனது சக்திக்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறினார்.

அவரது இந்த சேவையை பல மாநில அரசுகளும் பாராட்டியுள்ள நிலையில் தெலுங்கானா மக்கள் ஒரு படி மேலே சென்று சோனுவுக்காக கோவிலே கட்டியுள்ளனர். தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டம் டபா தண்டா கிராமத்தில் அவருக்காக கட்டப்பட்டுள்ள கோவிலில் அவரது சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது