புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (12:10 IST)

பெகாசஸ் வழக்கு; மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை! – தொழில்நுட்ப குழு அறிக்கை!

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தொழில்நுட்ப குழு அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நிறுவனத்தின் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி மத்திய அரசு எதிர்கட்சி தலைவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சிலரையும் உளவு பார்த்ததாக வெளியான குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உச்சநீதிமன்றம் தொழில்நுட்ப குழு ஒன்றை அமைத்தது.

பல்வேறு விசாரணைகளை மேற்கொண்ட தொழில்நுட்ப குழு இன்று உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், விசாரணைக்கு மத்திய அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாகா ஆய்வு செய்யப்பட்ட 29 செல்போன்களில் 3 செல்போன்களில் உளவு பார்ப்பதற்கான செயலி இருந்ததாகவும் ஆனால் அது பெகாசஸ் செயலி அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரவும், சட்ட விரோதமான உளவு நடவடிக்கைகளில் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க வழிமுறைகள் உருவாக்கவும் தொழில்நுட்ப குழு பரிந்துரைத்துள்ளது.