புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 ஜூன் 2021 (08:02 IST)

பிரதமர் தாடியை எடுக்க 100 ரூபாய் அனுப்பிய டீக்கடைக்காரர்!

பிரதமர் மோடி தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள 100 ரூபாயை அனுப்பியுள்ளார் அனில் மோர் எனும் டீக்கடைக்காரர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அனில் மோர் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவர் மணியார்டர் மூலமாக 100 ரூபாயை அனுப்பி அதைக்கொண்டு பிரதமர் தனது தாடியை ஷேவ் செய்துகொள்ள வேண்டுமென்று கூறியுள்ளார். மேலும் ‘பிரதமர் எதையாவது வளர்க்க வேண்டும் என்றால் நாட்டு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் லாக்டவுனால் துயரங்களுக்கு ஆளான மக்களை அதிலிருந்து விடுவித்தல் ஆகியவற்றையே செய்யவேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.