திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 ஜூன் 2021 (07:55 IST)

5 நிமிடம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தினோம்… மருத்துவமனை உரிமையாளர் அதிர்ச்சி தகவல்!

உத்தர பிரதேசத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் யார் யாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் தேவை என்பதை தெரிந்துகொள்ள 5 நிமிடம் ஆக்ஸிஜன் வழங்கலை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலான மரணங்கள் ஆக்ஸிஜன் வழங்க முடியாததால் நடந்தவை. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பராஸ் என்ற தனியார் மருத்துவமனை உரிமையாளர் பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதில் ‘எங்கள் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பெற்றுவருபவர்களில் யாருக்கெல்லாம் ஆக்ஸிஜன் கட்டாயமாக தேவை என்பதைத் தெரிந்துகொள்ள ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்தினோம்.  உடனே 22 நோயாளிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உடல் நீல நிறமாக மாறியது. அவர்கள் எல்லாம் பிழைப்பது கடினம் என்று தெரிந்துகொண்டோம்.  இதை அவர்களுக்கு உணரவைத்து, மற்ற நோயாளிகளை ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்து வர சொல்லி வலியுறுத்தினோம்’ எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு சமூகவலைதளங்களில் பரவி கண்டனங்களை எழுப்பியுள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.