புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 23 ஜூலை 2018 (08:16 IST)

இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலம்: தமிழகத்திற்கு கிடைத்த இடத்தால் அதிர்ச்சி

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சிஸ்டம் சரியில்லை என்பது உள்பட பல விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இந்தியாவில் சிறந்த நிர்வாகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. இதில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பொது நிர்வாகம், ஆட்சியின் திறன் உள்பட ஒருசிலவற்றை வைத்து ஒரு மாநிலத்தின் ஆட்சி நிர்வாகம் குறித்து மையம் என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளிவதுள்ளது. மின்சாரம், சாலை, குடிநீர், வீடு அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுக்கும் மாநில அரசாங்களை இந்த பட்டியல் வரிசைப்படுத்தியுள்ளது.
 
அந்த வகையில் இந்தியாவில் சிறந்த நிர்வாகம் வகிக்கும் மாநிலமாக கேரளம் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும், தெலுங்கானா மூன்றாவது இடத்திலும் உள்ளது. கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் கடைசி இடத்தில் பீகார் உள்ளது.
 
இந்த பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதை நெட்டிசன்கள் பாராட்டாமல் பட்டியல் செய்த மையத்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.