புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (16:56 IST)

ஜப்பான் முன்னாள் பிரதமர் மறைவை சீனா கொண்டாடியதா? சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சி தகவல்;!

subramaniya swamy
உலகமே ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவை துக்க தினமாக அனுசரித்து உள்ள நிலையில் சீனா மற்றும் கொண்டாடி வருவதாக சுப்பிரமணியசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கூறினார்
 
உலக தலைவர்கள் அனைவருமே இந்த படுகொலையை கண்டித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுப்பிரமணியசாமி தனது சமூக வலைத்தளத்தில் உலகமே முன்னாள் ஜப்பான் பிரதமர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் சீனா மட்டும் சந்தோஷம் அடைந்து இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்த கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது