ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:19 IST)

எந்த முன்னேற்றமும் இல்லை… 12 ஆவது நாளாக மருத்துவமனையில் பிரனாப் முகர்ஜி!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான பிரனாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் ஜனாதிபதியாக 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி முதல் 2017-ம் ஆண்டு பாஜக ஆட்சி வரை பதவி வகித்தவர் பிரனாப் முகர்ஜி. இவர் மருத்துவமனையில் மூளையில் உள்ள ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்குக் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா சோதனைகள் செய்துகொள்ளும் படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.