புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஏப்ரல் 2022 (13:20 IST)

இலங்கை நிலை இந்தியாவுக்கு வரும்: பிரதமரிடம் அதிகாரிகள் கவலை!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில் இலங்கை நிலைமை இந்தியாவுக்கும் வரும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது 
 
மாநிலங்கள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து வருவதால் மாநிலங்களின் பொருளாதார நிலை சிக்கலில் இருப்பதாகவும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கை நிலைமை தான் இந்தியாவுக்கு வரும் என்றும் பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களை நிறுத்த பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்