வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (14:45 IST)

பிரதமர் இல்லம் முற்றுகை.! ஆம் ஆத்மி கட்சியினர் கைது.! டெல்லியில் பதற்றம்..!!

AAP Arrest
டெல்லியில் தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.
 
டெல்லியில் மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையினர் கைது செய்தனர். 
 
கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.