வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 30 செப்டம்பர் 2024 (15:41 IST)

'நடிகைக்கு பாலியல் தொல்லை' - நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை.!!

Actor siddique
மலையாள நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ள உச்சநீதிமன்றம், கேரள அரசும், புகார் அளித்த நடிகையும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க  உத்தரவிட்டது.
 
கேரள திரைப்படத் துறையில் பாலியல் துன்புறுத்தல் இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில், நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஸ்கட் ஹோட்டலில் 2016 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக நடிகை அளித்த புகாரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
மூத்த மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஜாமீனில் வெளிவர முடியாத குற்றங்களின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து முன் ஜாமின் பெறுவதற்காக கேரள உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் சித்திக்.

ஆனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டதால், அவர் தலைமறைவானார். இதனையடுத்து லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சித்திக்கின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நடிகர் சித்திக்கை கைது செய்ய உச்ச  இடைக்கால விதித்து உத்தரவிட்டனர். மேலும், கேரள அரசும், புகார் அளித்த நடிகையும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க நீதிபதிகள் ஆணை பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.