வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (10:36 IST)

எஸ்.பி.ஐ வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

வங்கிகளை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதை கண்டித்து எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்
 
இந்த போராட்டத்திற்கு மற்ற வங்கி ஊழியர்களின் சங்கங்களும் ஆதரவு கொடுத்துள்ளதை அடுத்த இரண்டு நாள் நாடு முழுவதும் வங்கிகள் பணி பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் இந்த நிலையில் வேலை நிறுத்தத்தை நிறுத்துவதற்காக வங்கி ஊழியர்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன