1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (07:52 IST)

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியா? சோனியா காந்தி அதிர்ச்சி!

Sasi Tharoor
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சோனியா காந்தி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் செப்டம்பர் 19ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி அல்லது ராகுல் காந்தி போட்டியிடுவார் என்றும் இவர்கள் இருவரில் யார் போட்டியிட்டாலும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சோனியா காந்தி அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக போட்டியிட முடிவு செய்திருந்தார் என்றும் இதனை அடுத்து சசிதரூர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.