1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (20:56 IST)

காங்கிரஸ் கட்சி எந்நேரத்திலும் சரிந்து விழலாம்: குலாம் நபி ஆசாத் பேச்சு

Gulam
காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாக இருப்பதால் எந்த நேரத்திலும் சரிந்து விழும் ஆபத்து இருப்பதாக குலாம்நபி ஆசாத் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகினார் என்பது அவரது விலகலால் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி எந்த நேரத்திலும் சரிந்து விடலாம் என்றும் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது