வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 டிசம்பர் 2017 (17:11 IST)

என்னை சிக்க வைத்ததே உம்மன் சாண்டிதான் ; சரிதாநாயர் பரபரப்பு பேட்டி

சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிதான் தன்னை சிக்க வைத்தார் என நடிகை சரிதா நாயர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.


 
கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது...
 
இந்த வழக்கில் ஆஜராக இன்று சரிதா நாயர் நீதிமன்றத்தி வந்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
இந்த வழக்கில் முன்னாள் முதல்வர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் வழக்கு முடிய நீண்ட நாட்களாகும். இந்த வழக்கைப் பொறுத்தவரை நான் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியால் சிக்க வைக்கப்பட்டேன். நான் ஏமாற்றப்பட்டேன். என் மீது பாலியல் வழக்கும் தொடரப்பட்டது. அரசியல்வாதிகளை நம்பி நான் ஏமாந்து போனேன். என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது. என்னை நாசம் செய்து விட்டனர். நான் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறேன்” என அவர் கூறினார்.