திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 29 செப்டம்பர் 2018 (09:43 IST)

ஊடகங்களால் கண்டு கொள்ளப்படாத கிரிக்கெட் வீரரின் உதவி

கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் ஒருசில லட்சங்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக வழங்கியபோது தலைப்பு செய்திகள் போட்டு கொண்டாடிய ஊடககங்கள், ஒருசிலர் தியாக மனப்பான்மையுடன் கொடுக்கும் சிறிய தொகையை கண்டு கொள்வதே இல்லை

இந்திய அணியின் 16 வயதுக்குட்பட்ட அணியில் சமீபத்தில் இடம்பெற்றவர் சாஹில் கோச்சரேகர். நடுத்தர குடும்பத்தில் இருந்து கிரிக்கெட் விளையாட்டிற்கு வந்த இவர் தனது விடாமுயற்சி மற்றும் திறமையினால் அணியில் இடம்பெற்றார். இவரிடம் சொந்தமாக ஒரு விலையுயர்ந்த பேட் கூட இல்லை.

இருப்பினும் இவர் தனக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதுக்கான பணம் முழுவதையும் கேரள மாநில வெள்ள நிவாரண நிதியாக அளித்துள்ளார். இதனை மற்ற ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை எனினும் செய்தியாக பதிவு செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம்