திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 செப்டம்பர் 2018 (13:35 IST)

வெள்ளத்தில் மூழ்கிய இமாச்சல் பிரதேசம்… மீட்பு பணி தீவிரம்…

இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் குலு,சிம்லா,பிலாஸ்பூர், உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.



மண்டி மாவட்டத்தில் உள்ள பியாஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மணாலி ஆற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த சுற்றுலா பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் காட்சிகள்  இந்த மழையின் உக்கிரத்தைக் காட்டுகின்றன. 

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டரில் சென்ற ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து சென்றனர்.