புதிய ஊதிய கொள்கை : அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி
புதிய ஊதிய கொள்கைக்கு எதிராக ஆந்திராவில் அரசு ஊழியர்கள் பிரமாண்ட பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஜெகன்மோகன் ரெட்டில் தலைமையிலான ஒய்யெஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
அப்போது முதல் மக்களின் திட்டங்களுக்கு நேரடியாகப் பணம் பட்டுவாடா செய்யும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டது. இதனால் மாநில நிதி நிலையை மோசம் அடைந்தது. இதனால் புதிய ஊதிய கொள்கையை அறிவித்தது.
இந்நிலையில், ஊதியம் குறையும் என்ற அபாயமுள்ளதால் ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். எனவே இன்று விஜயவாடாவில் அரசு ஊழியர்களின் பேரணி நடந்தது. வரும் 7 ஆம் தேதி கால வரையற்றை போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.