புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (13:03 IST)

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்.30 வரை மட்டுமே அனுமதி என அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலவச தரிசனம் நிறுத்தப்பட்டது என்பதும் 300 ரூபாய் டிக்கெட் வாங்கிவர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின் படி கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதன் காரணமாகவும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே 1ம் தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏப்ரல் 30ஆம் தேதி வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மே 1ஆம் தேதியிலிருந்து 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் எண்ணிக்கையும் வெகுவாக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்