ராமர் கோயில் கட்ட திட்டம் தயார்; மக்களவையில் பிரதமர் மோடி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் தயார் என பிரதமர் மோடி மக்களவையில் கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ராமர் கோவில் கட்டுவதற்காக ”ஸ்ரீ ராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா” என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ராமர் கோயில் கட்டுவதற்கான திட்டம் தயார் என மக்களவையில் பிரதமர் மோடி மக்களவையில் அறிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.