”வன்முறையற்ற போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்..” ராகுல் டிவிட்
வன்முறையற்ற மாணவர் போராட்டத்திற்கு தான் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டத்தில் வன்முறை வெடித்தது.
வன்முறையில் 3 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. பின்பு போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.
இதனை தொடர்ந்து, இரவில் போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கல்வீசியதாக கூறப்படுகிறது. பின்பு பல்கலைகழக வளாகத்திற்குள் போலீஸார் நுழைந்தனர். இதில் 6 பேர் காயம் அடைந்தனர்.
இதனையடுத்து ஜாமியா பல்கலைகழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து, அலிகார் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதில் போலீஸாருடன் கைகலப்பு ஏற்பட்டு, மாணவர்கள் கற்களை கொண்டு தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 5 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில், குடியுரிமை சட்ட மசோதா, NRC, ஆகியவை ஃபாசிஸத்தின் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களிலிருந்து இருந்து நம்மை பாதுகாக்க, அமைதியான வன்முறையற்ற சத்தியாகிரக வழியையே நாம் கடைபிடிக்க வேண்டும். அமைதியாக போராட்டும் மாணவர்களுக்கு நான் எப்போதும் ஆதரவாக இருப்பேன்” என கூறியுள்ளார்.