புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:10 IST)

இருவரின் வளர்ச்சிக்காக உயர்த்தப்பட்டது சிலிண்டர் விலை: ராகுல் காந்தி டுவீட்!

இந்தியாவில் பெட்ரோல் விலை தினந்தோறும் கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு தாங்க முடியாத பொருளாதார சுமையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலையை அடுத்து கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது
 
710 ரூபாய்க்கு கடந்த மாதம் விற்பனையாகிக் கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது என்ற நிலையில் தற்போது மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 785 என்ற நிலையில் தற்போது விற்பனையாகி வருகிறது. ஒரே மாதத்தில் ரூபாய் 75 கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் கேஸ் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கடுமையான கண்டனத்தை தெரிவித்து ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார். ’இருவரின் வளர்ச்சிக்காக மக்களிடம் கொள்ளை’ என்று கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 50 உயர்த்தப்பட்டதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி பதிவு செய்துள்ளார். ராகுல்காந்தி குறிப்பிடும் அந்த இருவர் யார் என்பது அனைவரும் அறிந்ததே.