திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (08:14 IST)

லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகிறாரா ராகுல் காந்தி? இன்று காங்கிரஸ் கூட்டம்..!

Ragul Gandhi
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் சுயேச்சை எம்.பி. ஒருவர்  சேர்ந்ததால் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கை 100 என ஆகியுள்ளது. 
 
இந்த நிலையில் பாஜகவை அடுத்து அதிகமாக தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாத காரணத்தினால் சோகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகிறாரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. டெல்லியில் இன்று காலை  11 மணிக்கு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரஸ் எம்பிக்களின் தலைவராக தேர்வு செய்வார் என்றும், இதனையடுத்து அவர் எதிர்க்கட்சி தலைவராவார் என்றும் தெரிகிறது.
 
டெல்லியில் இன்று மாலை 5.30 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காங்கிரஸ் எம்பிக்களின் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தில் ராகுல் காந்தி லோக்சபா எதிர்க்கட்சி  தலைவராக தேர்வாக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
 
Edited by Mahendran