வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2024 (12:10 IST)

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமீன்.. காங்கிரஸார் கொண்டாட்டம்..!

ragul gandhi
பாஜகவை அவதூறாக பேசியதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி கே சிவகுமார் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கில் இன்று ராகுல் காந்தி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

பெங்களூரில் உள்ள சிவில் சிட்டி நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடந்த போது ராகுல் காந்திக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஏற்கனவே கடந்த ஒன்றாம் தேதி ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்த நிலையில் அன்றைய தினம் ராகுல் காந்தி ஆஜராகவில்லை

மேலும் கர்நாடகாவில் வெளியிடப்பட்ட கட்சி விளம்பரங்களில் ராகுல் காந்திக்கு தொடர்பு இல்லை என்று காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் வாதாடிய நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே சித்தராமையா, டி கே சிவகுமார் ஆகியோர் ஜாமீன் பெற்ற நிலையில் தற்போது ராகுல் காந்தியும் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்திக்கு ஜாமீன் கிடைத்துள்ளதை காங்கிரஸ் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Edited by Mahendran