ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (19:35 IST)

காங்கிரசைக் கண்டு பாஜக பயப்படுகிறது: காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சி உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரஸ் கட்சியை பார்த்து பாஜக பயப்படுகிறது என ராகுல் காந்தி மக்களவையில் ஆவேசமாக பேசியதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சீனா மற்றும் பாகிஸ்தான் விவகாரத்தை நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் எனது கேள்விகளுக்கு பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் மக்களவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் 
 
மேலும் நாங்கள் உண்மையை மட்டுமே பேசுவதால் காங்கிரசை கண்டு பயப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.