செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (15:44 IST)

இலவச மின்சாரம், இலவச பேருந்து.. இன்னும் பல..! – வாக்குறுதிகளை அள்ளி விடும் பாஜக!

உத்தர பிரதேச தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிடும் நிலையில் பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் இந்த மாதத்தில் நடைபெற உள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற பாஜக வியூகங்களை வகுத்து வருகிறது. அதன்படி பல்வேறு கருத்துகளையும் உள்வாங்கி தேர்தல் அறிக்கையை இன்று பாஜக வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக விவசாயிகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச மின்சாரம், 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு பொது போக்குவரத்தில் இலவச பயணம், ஏழை பெண்களுக்கு திருமணத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.