திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 டிசம்பர் 2018 (07:58 IST)

3 மாநில முதல்வர்களை டெக்னாலஜி உதவியுடன் தேர்வு செய்யும் ராகுல்காந்தி

நடைபெற்று முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மூன்று பெரிய மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. அந்தந்த மாநில கவர்னர்களிடம் ஆட்சி அமைக்க உரிமையும் கோரப்பட்டுள்ள நிலையில் எந்த நேரத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது.

இந்த நிலையில் மூன்று மாநிலங்களிலும் முதலமைச்சரை தேர்வு செய்ய அந்தந்த மாநிலங்களில் இருந்து தேர்வான எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதிகாரம் அளித்துள்ளனர். இருப்பினும் இந்த அதிகாரத்தை அவர் தவறாக பயன்படுத்தாமல் ஜனநாயக முறைப்படி டெக்னாலஜி உதவியுடன் மூன்று மாநில முதல்வர்களை தேர்வு செய்யவுள்ளார்.

இதற்காக 'சக்தி' என்ற செயலியை தொடங்கியுள்ள ராகுல்காந்தி, எம்.ல்.ஏக்களிடம் அந்த செயலி மூலம் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும்படி எம்.எல்.ஏக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யும் நபரை முதல்வர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார். ராகுல்காந்தியின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.