1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (10:25 IST)

தேர்தலில் பாஜக பின்னடைவு எதிரொலி: மும்பை பங்குச்சந்தை வீழ்ச்சி

சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் மூன்று முக்கிய மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் பாஜக பின்னடவை சந்தித்து வருகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் ஆட்சி கையை விட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பாதகமாக வந்து கொண்டிருப்பதால் இன்'று காலை மும்பை பங்குச்சந்தை சரிவுடனே ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்து 34,458-ல் வர்த்தகம் ஆகிக்கொண்டிருக்கின்றது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 144 புள்ளிகள் குறைந்து 10,344-ல் வர்த்தகம் நடந்து வருகிறது.  இதனால் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு ரூபாயின் மதிப்பு ரூ.72.23 ஆக தற்போது உள்ளது. இன்று மட்டும் 1.25% உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.