வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (13:25 IST)

பிரதமர் மட்டும்தான் திருக்குறள் சொல்வாரா? – திருக்குறளை கையிலெடுத்த ராகுல்காந்தி!

பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பேசும்போது திருக்குறளை முன்னுதாரணம் காட்டி வரும் நிலையில் தற்போது ராகுல்காந்தியும் திருக்குறள் குறித்து பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி உள்ளிட்ட தேசிய தலைவர் அவ்வபோது தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை புரிய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மேடை பேச்சின்போதும் திருக்குறளை உதாரணம் காட்டி பேசி வருவது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி திருவள்ளுவர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தான் திருக்குறள் படித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ள விசயங்கள் வியப்பை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ள அவர் கேட்டு எளிதில் புரிந்துகொள்ள கூடியதாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியை தொடர்ந்து ராகுல்காந்தியும் திருக்குறள் பற்றி பேசியுள்ளது தேர்தலில் கவனத்தை ஈர்க்கவா என்ற ரீதியில் அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.