6 மடங்கு விலை வைக்கும் தனியார் மருத்துவமனைகள்! – தடுப்பூசியை வைத்து வசூல்?
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகள் அதிக விலைக்கு தடுப்பூசிகளை அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி உள்ள நிலையில் சமீபத்தில் ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்கிற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.600 தொடங்கி ரூ.1500 வரை மாநிலம்தோறும், மருத்துவமனைகள்தோறும் விருப்பப்பட்ட விலையை நிர்ணயிப்பதாக கூறப்படும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.