செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (14:06 IST)

புதுச்சேரி முதல்வராக பதவியேற்றார் என்.ரங்கசாமி!

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் என்.ரங்கசாமி முதல்வராக பங்கேற்றார். நடந்து முடிந்த புதுவை சட்டமன்ற தேர்தலில்  என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.  
 
இதில் மெஜாரிட்டி  என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை தேர்வு  செய்தனர்.  இதைத்தொடர்ந்து இன்று அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும்  பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.