காஷ்மீரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி! அதிரடி முடிவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்கனவே ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் மேலும் ஆறு மாதங்களுக்கு அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் மேலும் ஆறு மாதங்கள் ஜனாதிபதி ஆட்சி தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற மெஹபூபா முப்தி கட்சி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை கடந்த வருடம் பாஜக வாபஸ் பெற்றது. எனவே ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அங்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது
இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சியின் 6 மாத காலம் முடிவடைந்ததை அடுத்து அம்மாநிலத்தில் மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து அங்கு மீண்டும் ஜனாதிபதி ஆட்சி தொடர்கிறது. இம்மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை முடிந்த பிறகு வரும் நவம்பர் அல்லது டிசம்பரில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது