வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 10 ஆகஸ்ட் 2024 (13:28 IST)

பிரியாணியில் கிடந்த பூரான்.! ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்.!!!

Biryani
கேரளாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ வாங்கிய பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் திருவல்லா கடப்ரா ஜங்ஷன் அருகே உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் காவல்துறை எஸ்.ஐ  அஜித்குமார் பிரியாணி வாங்கி பாதியளவு சாப்பிட்டு விட்டார். அப்போது அதில் பூரான் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது  அலட்சியமாக பதில் அளித்தனர். பிரியாணியில் பூரான் கிடந்தது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் எஸ்.ஐ அஜித்குமார் புகார் செய்தார். அதன் பேரில் ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.

இதை அடுத்து அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். பிரியாணியில் பூரான் இருந்த சம்பவம் அசைவ பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.