வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 8 ஏப்ரல் 2021 (08:02 IST)

கொரோனா தடுப்பூசி போட்டும் பாசிடிவ் - நக்மா ட்விட் பதிவு!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மா இருப்பினும் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 
கடந்த சில வாரங்களாக இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பூசி அனைவருக்கும் செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மா இருப்பினும் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தம்மை தாமே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.