எனக்கு பிரதமர் பதவி வேண்டாம், மாநில மக்களுக்கு சேவை செய்யவே ஆசை: நிதிஷ்குமார்
எனக்கு பிரதமர் பதவி வேண்டாம் என்றும் எனது பீகார் மாநில மக்களுக்கு சேவை செய்யவே எனக்கு விருப்பம் என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பிரதமராக முடியும் என்றால் பீகார் மாநிலத்தின் முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் ஏன் பிரதமராக முடியாது என்ற கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை என்றும் நான் என் மாநிலத்துக்கு சேவை செய்யவே விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றுவேன் என்றும் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.