1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (11:13 IST)

பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டமா? முதல்வர் ஆலோசனை

stalin
பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டம் மாற்றுவது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
பொறியியல் படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் மாற்றம் வேண்டும் என கல்வியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கும் இந்த ஆலோசனையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் கல்வியாளர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த ஆலோசனைக்கு பின்னர் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.