சென்னை – அந்தமான் இடையே கண்ணாடி இழை கேபிள் இணைப்பு! – பிரதமர் மோடி தொடக்கம்!

Andaman
Prasanth Karthick| Last Modified திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (08:23 IST)
சென்னையிலிருந்து அந்தமான் தீவுகளுக்கு கடல்வழி தொடர்பை ஏற்படுத்தும் கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

அந்தமான் நிக்கோபார் மற்றும் அதை சுற்றியுள்ள கிளை தீவுகள் முழுவதற்கும் தொலைப்பேசி இணைப்பு, இணைய இணைப்பு ஆகியவற்றை இந்தியாவிலிருந்து கொண்டு செல்ல முன்னரே முடிவெடுக்கப்பட்டது. அதன்படி தமிழக தலைநகரான சென்னையிலிருந்து கண்ணாடி இழை கேபிள்கள் மூலம் அந்தமான் தீவுகளை இணைப்பதற்கான திட்டம் தொடங்கப்பட்டது.

அந்தமான் – சென்னை இடையே உள்ள 2300 கி.மீ தொலைவிற்கு நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள்கள் அமைப்பதற்கு ரூ.1124 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 2018ல் போர்ட்ப்ளேயரில் நடைபெற்ற நிலையில் தற்போது பணிகள் முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி காணொளி வழியாக சேவைகளை தொடங்கி வைக்கிறார். இதனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தொலைதொடர்பு வசதி மட்டுமல்லாது, பொருளாதார வளர்ச்சி, தொலை மருத்துவம், தொலை நிலை கல்வி ஆகியவற்றிற்கும் இது உதவும் என அவர் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :