புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (10:51 IST)

”அப்பளம் சாப்பிட்டா கொரோனா வராது”ன்னு சொன்ன அமைச்சருக்கு கொரோனா!

சமீபத்தில் அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது என பாபிஜி பப்பட்-ஐ ப்ரோமோட் செய்த மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு மருந்தாக முன்வைக்க கூடிய பொருட்கள் குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது,சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் “பாபிஜி அப்பளம்” கொரோனா எதிர்ப்பு சக்தியை அளிப்பதாகவும், தற்சார்பு பொருளாதாரத்தில் உருவான பொருளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கொரோனா பாதிப்பினால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலாவதாக சோதனை செய்த போது நெகட்டிவ் என முடிவுகள் வந்ததாகவும், இரண்டாவது முறையாக பாஸிட்டிவ் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.