1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 20 அக்டோபர் 2017 (14:04 IST)

மூதாட்டியின் நடனம்; மோடியின் தாய் என தவறாக பதிவிட்ட கிரண் பேடி

மூதாட்டி ஒருவர் நடனமாடியதை பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபென் மோடி நடனமாடிதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

 
 
தீபாவளிப் பண்டிகை நேற்று முன்தினம் தமிழகத்திலும், நேற்று வட மாநிலங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், ஹீராபென், தனது வீட்டில் நடனமாடி உற்சாகமாக தீபாவளியைக்  கொண்டாடினார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது.
 
இந்த வயதிலும் உற்சாகமாக நடனமாடி தீபாவளி கொண்டாடியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக  வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.