1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:29 IST)

நீட் தேர்வு நுழைவுத்தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை: அதிர்ச்சி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்பதும் ஆன்லைன் மூலம் மட்டுமே பாடங்களை படித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு முழு ஆண்டு தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறைக்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் நீட் தேர்வு மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலம் என்பதால் நீட் தேர்வு பாடத் திட்டங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருந்த நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு அறிவிப்பை தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
எனினும் ஜேஈஈ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் ஒரு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜேஈஈ தேர்வு எழுதும் மாணவர்கள் 90 கேள்விகளில் இருந்து 75 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் என்ற சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இயற்பியல் வேதியியல் கணிதம் ஆகிய மூன்று பகுதிகளில் கேட்கப்படும் 90 கேள்விகளில் தலா 25 என மொத்தம் 75 கேள்விகளுக்கு விடை அளித்தால் போதும் என தேசிய தேர்வு முகமை சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. ஆனால் நீட் தேர்வு மாணவர்களுக்கு எந்தவித சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது