புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஜனவரி 2021 (13:07 IST)

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிரடி சலுகை நீட்டிப்பு !!

இந்தியாவின் அரசுசார் நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது இலவச சிம் கார்டு சேவையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஜியோ,ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நெட்வொர்க்குகளுகு மத்திய மத்திய அரசுசார் நிறுவனமாக பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு சேவை மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க அரசு பி.எஸ்.என்.எல்  நிறுவனம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

அதன்படி, பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது இலவச சிம்கார்டு சேவையை வரும் ஜனவரி 31 ஆம் ஆதி வரை நீட்டித்துள்ளது.  இதுகுறித்த முறையான அறிவிப்பு பி.எஸ்.என்.எல் தமிழ்நாடு வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

இச்சலுகையில் பி.எஸ்.என்.எல் ரூ.186 மற்றும் ரூ.196 க்கு சலுகை விலையை மாற்றியுள்ளது. புதிய பி.எஸ்.என்.எல் சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இருப்பினும் பயனர்கள் ரூ.100 சலுகையைப் பெறவேண்டும்.

மேலும், பி.எஸ்.என்.எல் ரூ.186 சலுகை மற்றும் ரூ.199 சலுகை விலை மாற்றபட்டுள்ளது. ரூ.186 சலுகையின் இதன் தற்போதைய  விலை ரூ.199 ஆகும். இதன் வேலியிட்டி நாட்கள் முதலில் 30 நாட்கள் இருந்த நிலையில் தற்போது 28 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது.

அதேபோல் ரூ.199 சலுகையின் தற்போதைய விலை ரூ.201 என மாறியுள்ளது.பழைய வேலிட்டி அம்சங்களும் பலன்களும் அப்படியே உள்ளது.