வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:25 IST)

துணிக்கடைகளில் இருக்கை அவசியம் -கேரளாவில் புதிய சட்டம்

துணிக்கடைகளில் வேலை செய்வோருக்கு இருக்கை அமைத்து தருவது கட்டாயம் என கேரள அரசு புது சட்டம் இயற்றியுள்ளது.

கேரளாவில் ஜவுளி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் தங்கள் வேலை நேரம் முழுவதும் நின்றபடியே வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் படுவதாகவும், வேலை நேரத்தின் போது ஓய்வறைக்கு செல்லக் கூட அனுமதிக்கப்படுவது இல்லை எனவும் கூறி போராட்டம் நடத்தினர். அதில் தங்களுக்கு பணிபுரியும் இடங்களில் அமர்ந்து வேலை செய்யும்படி இருக்கை வசதிகள் அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தினர். இதைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட மனித உரிமைகள் ஆணையம் இது சம்மந்தமான சட்டதிருத்தத்திற்குப் பரிந்துரை செய்தது.

இதையடுத்து கேரள அரசு, தனது கேரளக் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1960-ல் சில சட்ட திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதில் கேரளாவில் உள்ள ஜவுளிக் கடைகள் அனைத்திலும் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் அமர்ந்து வேலை செய்யும் விதத்தில் அவர்களுக்கு இருக்கை அமைத்துத் தரவேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. இதை அமல்படுத்தாத கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளும் 2 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.