வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2019 (12:27 IST)

4 சதவீதம் பேர் மட்டுமே வரி செலுத்துகின்றனர் - முட்டாள்தனமாக கேள்வியெழுப்பிய நடிகை கங்கனா !

நாட்டில் மூன்று முதல் நான்கு சதவீதம் பேர் மட்டும்தான் வருமானவரி செலுத்துவதாகவும் மற்றவர்கள் அவர்களின் வரியை சார்ந்தே வாழ்வதாகவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத் ’போராட்டங்களின் போது முதல் விஷயமாக கடைப்பிடிக்க வேண்டியது  வன்முறையின்மை. நமது மக்கள் தொகையில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே வரி (வருமான வரி )செலுத்துகின்றனர்.  மற்றவர்கள் அனைவரும் அந்த வரியை சார்ந்துள்ளனர். அதனால் போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது ?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.

போராட்டக் களத்தில் வன்முறையை யார் நிகழ்த்தியது என்பது ஒருபுறமிருக்க, கங்கனாவின் முட்டாள் தனமானக் கேள்வி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நாட்டில் வருமான வரி மட்டும்தான் ஒரே வரியா ? மக்கள் தாங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அரசுக்கு வரி செலுத்தவில்லையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.